Sunday, December 6, 2009

பகுதி - 21: நயவஞ்சகனின் அடையாளங்கள்:

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. அவையாவன:
அவன் பேசினால் பொய்யே பேசுவான்; வாக்குறுதி கொடுத்தால் அதை முறித்துவிடுவான்; அவனை நீங்கள் நம்பினால், அவன் நேர்மையற்றவன் என்பதை நிரூபிப்பான்." - ஸஹிஹ் புஹாரி (1:32)

----------------------------------------------------------------------------------------

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) நவின்றார்கள், "எவனிடம் கீழ்க்கண்ட நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் ஒரு சுத்தமான (வடி கட்டிய) நயவஞ்சகனாவான். எவனிடம் கீழ்க்கண்ட நான்கு குணங்களில் ஒன்றாவது கொண்டிருக்கிறாரோ, அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு தன்மை அவனிடம் இருந்துக் கொண்டேயிருக்கும்.
- நம்பினால் மோசம் செய்வான்.
- பேசினால் பொய்யே பேசுவான்.
- ஒப்பந்தம் சாய்த்தால் மீறுவான்.
- விவாதம் செய்தால் நியாயமற்ற முறையிலும், தீய மற்றும் மற்றவரை புண்படுத்தும் வகையிலும் நடந்துக் கொள்வான்." (ஸஹீஹ் புஹாரி: 1:33)

தமிழில் டைப் செய்ய: