Thursday, April 22, 2010

பகுதி 25: ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது ஈமானின் ஓர் அங்கம்.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்:
எவரொருவர் ரமலான் மாதத்தில், உண்மையான ஈமானுடனும் அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ, அவரது முன் சென்ற பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும். (ஸஹீஹ் புஹாரி:1:37)

பகுதி 24 - ரமலான் மாதத்தின் இரவுகளில் தொழுவது ஈமானின் ஓர் அங்கம்.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்:
அலாஹ்வின் தூதர் நவின்றார்கள், "எவரொருவர் ரமலான் மாதத்தின் இரவுகளில் முழு இறை நம்பிக்கையுடனும் அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும். (ஸஹீஹ் புஹாரி: 1:36)

Thursday, March 18, 2010

பகுதி - 23: அல்லாஹ்வின் வழியில் போர் புரிவதும் ஈமானின் ஒரு அங்கம்.

(அபூ ஹுரைரா (ரலி)) அறிவித்தார்கள்: நபி (ஸல்) நவின்றார்கள், "அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பியதற்காக மட்டும் இறை வழியில் போரிடுவருக்கு, அவரை கூலியையோ, போர் ஆதாயங்களை பெற்றவராகவோ திரும்ப கொண்டு சேர்ப்பது அல்லது (அவர் மரணமாகி விட்டால்) சொர்க்கத்தில் அனுமதிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுள்ளான். என்னை பின்பற்றுவோருக்கு சிரமம் ஏற்படும் என்று மட்டும் நான் காணவில்லையாயின், போருக்குச் செல்லும் எந்த படையுடனும் நானும் செல்லாமல் அமர்ந்திருக்க மாட்டேன். நான் அல்லாஹ்வுக்காக கொல்லப்பட்டு, பின்னர் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்படுவதையே விரும்புவேன். (ஸஹீஹ் புஹாரி: 1: 35)

Monday, March 15, 2010

பகுதி - 22: லைலதுல் கத்ரு இரவில் நின்று வணங்குவது ஈமானின் ஒரு பகுதி.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "யாரொருவர் லைலதுல் கத்ரு இரவில் முழு நம்பிக்கையோடும் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவராகவும் (மற்றவர்கள் பார்ப்பதற்காக அல்லாமல்) வணங்குகிறாரோ, அவரது முன் சென்ற பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் பட்டுவிடும்." (ஸஹீஹ் புஹாரி:1:34)

தமிழில் டைப் செய்ய: