Monday, March 15, 2010

பகுதி - 22: லைலதுல் கத்ரு இரவில் நின்று வணங்குவது ஈமானின் ஒரு பகுதி.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "யாரொருவர் லைலதுல் கத்ரு இரவில் முழு நம்பிக்கையோடும் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவராகவும் (மற்றவர்கள் பார்ப்பதற்காக அல்லாமல்) வணங்குகிறாரோ, அவரது முன் சென்ற பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் பட்டுவிடும்." (ஸஹீஹ் புஹாரி:1:34)

1 comment:

Unknown said...

என்று லைலத்துல் கத்ர் என்று தெரிந்தால் தானே நின்று வணங்க முடியும்? உடனே ஒற்றைப்படையில் என்று சொல்லிவிடக்கூடாது. முழுமையாக்கப்பட்ட மார்க்கத்தில் இப்படி ஒரு குறை இருக்க முடியுமா? நிச்சயமாக மார்க்கத்தில் குறை இல்லை. விளங்குகின்ற நம்மிடத்தில் குறை இருக்கிறது.

காலம் காலமாக ரமளான் 27 இரவு லைலத்துல் கத்ர் என்று ஹதீஸ் பிரகாரம் சுன்னத் ஜமாஅத்தினர் சொல்கின்றனர். சொல்கிறவர் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்தவராக அல்லவா இருக்கிறார், பலஹீனமான ஹதீஸாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு. சொன்னது நபி மொழியல்லவா? சொல்கிறவர் யாராகயிருந்தால் என்ன? நபி மொழியை ஏற்க வேண்டும் என்ற ஈமான் நம்மிடத்திலே இல்லையே!

ரமளான் 27 இரவு லைலத்துல் கத்ர் இல்லை என்று மார்தட்டுகிறவர்கள், ஆதாரம் காட்டமுடியாது என்று சொல்கிறவர்கள் ஆதாரம் இருக்கிறது என்று சொல்லும் சுன்னத் ஜமாஅத்தினரிடம் கேட்க வேண்டியதுதானே? கொடுத்தால் இன்னொருவரிடம் போய் இது உண்மையா என்று கேட்டு அவர் சரி என்று சொன்னால்தான் ஏற்போம் என்றால் சரி என்று உத்தரவாதம் கொடுப்பவர் நபிகள் காலத்தில் அல்லவா வாழ்ந்திருக்கவேண்டும்?

ஆகவே இவர் சொன்னால் சரியாக இருக்கும் அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று இல்லாமல் சொல்வது குர்ஆன் மற்றும் ஹதீஸா என்று பார்த்து அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை அல்லாஹ் தந்தருள்வானாக.

தமிழில் டைப் செய்ய: