Friday, July 31, 2009

பகுதி-10: குழப்பங்களை விட்டும் ஒதுங்கி ஓடுவது இஸ்லாத்தின் ஓரம்சம்

அபு சயீத் அல்-குத்ரி (ரலி) அறிவித்தார்கள்:
"ஒரு நேரம் வரும். அப்போது ஒரு முஸ்லிமின் சொத்துக்களில் ஆடு தான் சிறந்தது. அவன் குழப்பங்களிலிருந்து தனது மார்க்கத்தை காப்பாற்றிக்கொள்ள அந்த ஆட்டை கூட்டிக்கொண்டு மலையுச்சிகளுக்கும் மழை பெய்யும் பகுதிகளுக்கும் ஓடுவான் (சென்று வாழ்வான்)."
என
நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹ் புஹாரி : 1: 18)

பகுதி-9: அன்சார்களை நேசிப்பது இறைநம்பிக்கையின் அடையாளம் - 2

உபாதா பின் அஸ்சாமித் (ரலி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்மைச் சுற்றி தமது தோழர்களின் குழுவுடன் அமர்ந்திருந்தபோது கூறினார்கள், "அல்லாஹ்வுடன் வணக்கத்தில் வேறு எதையும் இணைப்பதில்லை, திருடுவதில்லை, விபச்சாரம் செய்வதில்லை, உங்கள் குழந்தைகளை கொல்வதில்லை, யார் மீதும் வேண்டுமென்றே அவதூறு கூறுவதில்லை. நல்ல காரியங்களை (செய்ய கட்டளையிடும்போது) மாறு செய்வதில்லை என என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள்.
உங்களில் யார் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வால் நற்கூலி கொடுக்கப்படுவார்; யார் இந்த பாவங்களில் ஈடுபடுகிறாரோ அவர் இவ்வுலகில் தண்டனையை அனுபவிப்பார். அத்தண்டனை அவரின் பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும், ஒருவர் இப்பாவங்களில் ஈடுபட்டு அல்லாஹ் அவற்றை மறைத்துவிட்டால், அவரை மன்னிப்பதோ அல்லது தண்டிப்பதோ அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளதாகும் (நாட்டத்திலுள்ளதாகும்). " [எனவே, நாங்கள் அவ்வாறு நடப்போம் என உறுதிமொழி கொடுத்தோம்.] (ஸஹீஹ் புஹாரி : 1:17)

Thursday, July 30, 2009

பகுதி-9: அன்சார்களை நேசிப்பது இறைநம்பிக்கையின் அடையாளம் - 1

நபி (ஸல்) அவர்கள், "அன்சார்களை நேசிப்பது இறைநம்பிக்கையின் (ஈமான்) அடையாளம். மேலும், அன்சார்களை வெறுப்பது நயவஞ்சகத்தின் அடையாளம்." என நவின்றதாக அனஸ் (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி :1:16)



பொருட்குறிப்பு: மதீனாவில் வாழ்ந்த நபித் தோழர்கள் அன்சார்கள் என்றழைக்கப்படுவார்கள். மக்காவில் நபியவர்களுக்கு குறைஷிகள் பல தொல்லைகளை கொடுத்துக்கொண்டிருந்தபோது இஸ்லாத்தில் இணைந்து தங்களது ஒத்துழைப்பையும் கொடுத்து அகதிகளாக மதீனா வந்தவர்களுக்கு உதவிகள் பல செய்து தங்களுடனே வாழ வைத்துக்கொண்டவர்கள்.

ரோஜா மலர்

Wednesday, July 29, 2009

பகுதி-8: இறைநம்பிக்கையின் இனிய சுவை

அனஸ் (ரலி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) கூறினார்கள், "கீழ்க்கண்ட மூன்று (தன்மைகள்) எவரிடம் உள்ளனவோ அவர் ஈமானின் (இறை நம்பிக்கையின்) இனிய சுவையை உணர்ந்தவராவார்.
  1. ஒருவருக்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் மற்றெல்லாவற்றையும் விட அதிக நேசதிற்குரியவராவது.
  2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காக மட்டுமே நேசிப்பது.
  3. இறை நிராகரிப்புக்கு திரும்புவதை நெருப்பில் தூக்கி எறியப்படுவதைப் போல் வெறுப்பது. " (ஸஹீஹ் புஹாரி:1:15)

Sunday, July 26, 2009

பகுதி-7: இறைத் தூதரை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னுடைய உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, உங்களில் ஒருவரும், அவரது தந்தை மற்றும் அவரது பிள்ளைகளை விட நான் அவருக்கு அன்பானவராக ஆகும் வரை, இறை நம்பிக்கையாளராக மாட்டார்" என்று கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:13)
-------------------------------------------------------------------------------------------------

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "என்னுடைய உயிர் எவனது கைவசம் உள்ளதோ, அவன் மீது ஆணையாக, உங்களில் எவரும் அவரது தந்தை, அவரது குழந்தைகள் மற்றும் ஏனைய மக்களை விட அதிகமாக என்னை நேசிக்கும் வரை இறை நம்பிக்கையாளராக மாட்டார்" என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:14)

பகுதி-6: தான் விரும்புவதை தனது சகோதரருக்கும் விரும்புவது ஈமானின் ஒரு பகுதி

அனஸ் (ரலி) அறிவித்தார்கள்: "நபி (ஸல்) கூறினார்கள், "தான் விரும்புவதையே தனது (முஸ்லீம்) சகோதரருக்கும் விரும்பும் வரை உங்களில் எவரும் (முழு) இறை நம்பிக்கையாளராக மாட்டார்." (ஸஹீஹ் புஹாரி:1:12)

பகுதி-5: உணவளிப்பதும் இஸ்லாத்தின் ஓர் பகுதி

ஒரு மனிதர் நபியவர்களிடம் யாருடைய இஸ்லாம் சிறந்தது அல்லது இஸ்லாத்தில் எத்தகைய நற்செயல்கள் சிறந்தவை எனக் கேட்டதற்கு, (மற்றவருக்கு) உணவளிப்பதும் உங்களுக்கு தெரிந்தோருக்கும் தெரியாதோருக்கும் சலாம் சொல்லுவதுமாகும் என நபி (ஸல்) பதிலளித்ததாக அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி: 1:11)

தமிழில் டைப் செய்ய: