Monday, December 24, 2012

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) நவின்றார்கள், "எவனிடம் கீழ்க்கண்ட நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் ஒரு சுத்தமான (வடி கட்டிய) நயவஞ்சகனாவான். எவனிடம் கீழ்க்கண்ட நான்கு குணங்களில் ஒன்றாவது கொண்டிருக்கிறாரோ, அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு தன்மை அவனிடம் இருந்துக் கொண்டேயிருக்கும்.
- நம்பினால் மோசம் செய்வான்.
- பேசினால் பொய்யே பேசுவான்.
- ஒப்பந்தம் சாய்த்தால் மீறுவான்.
- விவாதம் செய்தால் நியாயமற்ற முறையிலும், தீய மற்றும் மற்றவரை புண்படுத்தும் வகையிலும் நடந்துக் கொள்வான்." (ஸஹீஹ் புஹாரி: 1:33)

Chapter 26. Religion is very easy

Narrated Abu Huraura (RA): The Prophet (SA) said, "Religion is very easy and whoever overburdens himself in his religion will not be able to continue in that way. So, you should not be extermists, but try to be near to perfection and receive the good tidings that you will be rewarded; and gain strenth by offering the prayers in the mornings, afternoons and during the last hours of the nights"
(Al Bukhari 1:38)


நபி (ஸல்) அவர்கள் "மார்க்கம் மிகவும் எளிமையானது. யார் தமது
மார்க்கத்தில் தன்னை வருத்திக் கொள்கிறாரோ அவர் அவ்வாறே தொடர முடியாது. ஆகவே, நீங்கள் உங்கள் செயல்கள் மிகையாகாமல் நடுநிலைப் படுத்தி இறை நற்கூலி பெறுவீர்கள் என்ற நற்செய்தி பெற்றுகொள்ளுங்கள். காலையிலும், மதியத்திலும், பின் இரவிலும் தொழுது உங்கள் ஈமானை பலப்படுத்திக் கொள்ளுங்கள்."

அறிவிப்பு: அபூ ஹுரைரா (ரலி)

(அல் புஹாரி 1:38)

தமிழில் டைப் செய்ய: