Saturday, July 25, 2009

பகுதி-4: யார் சிறந்த முஸ்லீம்?

நபித் தோழர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "யாருடைய இஸ்லாம் மிகச் சிறந்தது? (யார் சிறந்த முஸ்லிம்?)" எனக் கேட்டதற்கு, "எவர் ஒருவர் முஸ்லிம்களை தனது நாவாலோ அல்லது தனது கைகளாலோ துன்புறுத்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்கிறாரோ அவரது (செயலே சிறந்தது)" என பதிலளித்தார்கள் என்று அபூ மூசா (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:10)

குறிப்பு: "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றிருக்கின்றனரோ அவரது செயலே" என்ற கருத்தையும் சில தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் பதிந்துள்ளனர்.

Friday, July 24, 2009

பகுதி-3: பிற முஸ்லிம்களுக்கு தம் நாவினாலும் கையினாலும் தொல்லை தறாதவரே முஸ்லீம்.

எவரொருவர் தனது நாவினாலும், கைகளாலும் பிற முஸ்லிம்களுக்கு தீமை விளைவிக்காமல் இருக்கிறாரோ அவரே முஸ்லிமாவார். அல்லாஹ்வால் தடுக்கப்பற்றவற்றை எவர் துறக்கின்றாரோ அவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி) அறிவித்தார்கள். (புஹாரி:1:9)

Thursday, July 23, 2009

பகுதி - 2: ஈமான் எனும் இறை நம்பிக்கையின் காரியங்கள்.

அபு ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "விசுவாசம் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக (பகுதிகளாக) உள்ளது. அல்-ஹயா (அல்-ஹயா என்ற இவ்வார்த்தை பெரும்பான்மையான அளவில் நற்குணங்களை குறிப்பதாகும். சுய மரியாதை, அடக்கம், வெட்கம், கண்ணியமான நடத்தை போன்றவை சில உதாரணங்களாகும்) ஈமானின் ஒரு பகுதியாகும்." எனக் கூறினார்கள். (புஹாரி:1:8)

Wednesday, July 22, 2009

பகுதி-1: இஸ்லாம் ஐந்து காரியங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை; முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஜக்காத்து வழங்குதல், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் மற்றும் ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் (புஹாரி:1:7)

பின் குறிப்பு:

தொழுகையை நிலை நிறுத்துதல்: ஐந்து நேரமும் குறிப்பிட்ட நேரத்தில் தொழுதல். எழு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கண்டித்தும், பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை தண்டித்தும் தொழ வைக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. தங்களின் அதிகார வரம்புக்குட்பட்ட முஸ்லிம்களின் தொழுகையில் பொடுபோக்குத் தனம் இருந்தால், அந்த குடும்ப, நகர, சமூக தலைவர், இஸ்லாமிய அரசின் தலைவர் ஆகியோர் அல்லாஹ்விடம் அதற்குப் பொறுப்பாக்கபடுவார்கள். (மேற்கோள்: புஹாரி அடிக்குறிப்பு)

Tuesday, July 21, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 5

(இப்னு அப்பாஸ் ரலி) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிகுந்த கொடையாளியாக திகழ்ந்தார்கள்; மேலும் ரமலான் மாதத்தில் ஜிப்ரீல் (அலை) நபியவர்களை சந்திக்கும்போது மிக மிக அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். அவர் (ஜிப்ரீல்) ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் சந்தித்து (அது வரை அருளப்பட்டிருந்த) குர்-ஆனை நினைவுபடுத்துவார். இருவருமாக குர்-ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசி மழை தரும் காற்றை விட (வேகமாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே இருந்தார்கள். (புஹாரி:1:5)

Monday, July 20, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 4

"அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்" (அல்-குர் ஆன் 75:16) என்ற அல்லாஹ்வின் திருவசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும்போது கீழ்கண்டவாறு விவரித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி அருளப்படும்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அவர்கள் தனது நாவினை (வேகமாக) அசைத்து ஓதினார்கள்."
மேலும், இப்னு அப்பாஸ் தன்னுடைய உதடுகளை அசைத்துக்காட்டியவாறு சொன்னார்கள்: (உங்களிடம்) நான் எனது உதடுகளை அசைத்தது போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது உதடுகளை அசைப்பார்கள். ஆகவே, அல்லாஹ், "அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர். (உம்முடைய நெஞ்சத்தில்) அதனை சேகரமாக்குவதும் (உம்முடைய நாவினால்) அதனை ஒதவைப்பதும் நமது பொறுப்பாகும். எனவே, அதனை (ஜிப்ரீலின் மூலம்) நாம் ஓதினால் பின்னர் அதன் ஒதுதலைத் தொடர்ந்து (ஓதிக்) கொள்வீராக. பிறகு, அதனை விளக்குவதும் நம் மீதே பொறுப்பாகும்." ( அல்-குர் ஆன் 75:16-19) என்ற இறைவசனத்தை இறக்கியருளினான்.
அதன் பின்னர் நபியவர்கள் ஜிப்ரீல் வரும்போது செவி தாழ்த்தி கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். ஜிப்ரீல் சென்ற பிறகு ஓத ஆரம்பிப்பார்கள். (புஹாரி:1:4)

சீன வினோதங்கள்

இந்த புகைப்படங்கள் ஏற்கனவே வந்திருக்கலாம். அனால், பார்த்தமாத்திரத்தில் இதை பிரசுரிக்கலாமே என்று நினைத்தேன். இது just cut & paste தான்.



























Sunday, July 19, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 3B

ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரலி) வஹீ தற்காலிகமாக நின்றிருந்த இடைக்காலத்தை பற்றி கூறும்போது நபி (ஸல்) அவர்களின் பேச்சைப் பற்றி அறிவித்தார்கள்: "நான் நடந்து சென்றுக் கொண்டிருக்கும்போது திடீரென வானத்திலிருந்து ஒரு சப்தத்தை கேட்டேன். நான் அண்ணார்ந்து பார்க்கும்போது, ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர், வானத்துக்கும் பூமிக்குமிடையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவரைக் கண்டு பயந்தவனாக (வீட்டுக்கு) திரும்பி வந்து 'என்னை போர்த்துங்கள்' என்றேன். அதன் பின்னர் அல்லாஹ் கீழ்க்கண்ட (குர் ஆனின்) திரு வசனங்களை இறக்கினான். "போர்வை போர்த்தியவரே எழும். (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யும். ... மேலும் அர்-ருஜ் (சிலைகள்) இடமிருந்து விலகி இரும். " (அல் குர் ஆன்:74:1-5)
அதன் பின்னர், இறைச்செய்தி வருவது பலமாகவும் ஒன்றன் பின் ஒன்றான தொடராகவும் ஆரம்பித்தது." (புஹாரி: 1:3B)

தமிழில் டைப் செய்ய: