Monday, July 20, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 4

"அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்" (அல்-குர் ஆன் 75:16) என்ற அல்லாஹ்வின் திருவசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும்போது கீழ்கண்டவாறு விவரித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி அருளப்படும்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அவர்கள் தனது நாவினை (வேகமாக) அசைத்து ஓதினார்கள்."
மேலும், இப்னு அப்பாஸ் தன்னுடைய உதடுகளை அசைத்துக்காட்டியவாறு சொன்னார்கள்: (உங்களிடம்) நான் எனது உதடுகளை அசைத்தது போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது உதடுகளை அசைப்பார்கள். ஆகவே, அல்லாஹ், "அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர். (உம்முடைய நெஞ்சத்தில்) அதனை சேகரமாக்குவதும் (உம்முடைய நாவினால்) அதனை ஒதவைப்பதும் நமது பொறுப்பாகும். எனவே, அதனை (ஜிப்ரீலின் மூலம்) நாம் ஓதினால் பின்னர் அதன் ஒதுதலைத் தொடர்ந்து (ஓதிக்) கொள்வீராக. பிறகு, அதனை விளக்குவதும் நம் மீதே பொறுப்பாகும்." ( அல்-குர் ஆன் 75:16-19) என்ற இறைவசனத்தை இறக்கியருளினான்.
அதன் பின்னர் நபியவர்கள் ஜிப்ரீல் வரும்போது செவி தாழ்த்தி கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். ஜிப்ரீல் சென்ற பிறகு ஓத ஆரம்பிப்பார்கள். (புஹாரி:1:4)

No comments:

தமிழில் டைப் செய்ய: