Thursday, August 13, 2009

பகுதி:19 - விசுவாசிகளிலிருந்து இரு குழுக்கள் போரில் ஈடுபட்டால் அவர்களிருவரிடமும் சமரசத்தை ஏற்படுத்துங்கள்.

அல்லாஹ் கூறுகிறான், "விசுவாசிகளிலிருந்து இரு குழுக்கள் போரில் ஈடுபட்டால் அவர்களிருவரிடமும் சமரசத்தை ஏற்படுத்துங்கள்... (அல் குர்-ஆன்:49:9)

அபூ பக்ராஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்:
"முஸ்லிம்கள் ஒருவருடன் ஒருவர் வாளெடுத்து சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொலை செய்தவர் மற்றும் கொலை செய்யப்பட்டவர் ஆகிய இருவருமே நரகிற்குத் தான் செல்வர்." என்று அல்லாஹ்வின் தூதர் கூறக் கேட்டேன். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே, கொலை செய்தவர் (நரகிற்கு) செல்வது சரி. ஆனால், கொலை செய்யப் பட்டவரை பற்றி என்ன? (கொலை செய்யப் பட்டவர் ஏன் நரகிற்கு செல்ல வேண்டும்?)" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக அவர் தனது நண்பரை (முஸ்லீம் சகோதரரை) கொல்ல நாட்டம் கொண்டிருந்தார்." என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:130)

Wednesday, August 12, 2009

பகுதி:18 - பாவங்கள் அறியாமையால் செய்யப்படுவது. ஒரு பாவி இறைவனுக்கு இணை வைக்காத வரை இறை மறுப்பாளர் ஆக மாட்டார்.

அபூ தர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
நான் ஒரு மனிதரை அவரது தாயை கெட்ட பெயர் சொல்லி திட்டிவிட்டேன். நபி (ஸல்) என்னிடம் கூறினார்கள், அபூ தரே! நீர் அவரை அவரது தாயை கேட்ட பெயர் சொல்லி திட்டினீரா? உம்மிடம் இன்னும் அறியாமையின் குணங்கள் உள்ளன. உங்களது அடிமைகள் உங்களின் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ் அவர்களை உங்களது அதிகாரத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, யாரேனும் ஒருவர், ஒரு சகோதரரை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டிருந்தால், தான் உண்பதிலிருந்து அவருக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும்; தான் அணிவதிலிருந்து அவருக்கும் அணிவிக்க வேண்டும். அவர்களை (அடிமைகளை) அவர்களது சக்திக்கு மீறிய செயலை செய்யச் சொல்லக் கூடாது. நீங்கள் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு (அவ்வேலையில்) உதவியாய் இருங்கள்." (ஸஹீஹ் புஹாரி: 1:29)

Monday, August 10, 2009

பகுதி-17: கணவனுக்கு நன்றி மறப்பவளாயிருப்பது. இறை நிராகரிப்பின் நிலைகள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) கூறினார்கள், "நான் நரக நெருப்பை காண்பிக்கப் பட்டேன். அதில் பெரும்பான்மையோர் இறை மறுப்பாளர்களான (அல்லது நன்றி மறந்தவர்களான) பெண்களாக இருந்தார்கள்."
அப்போது, "அவர்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்? (அல்லது அவர்கள் அல்லாஹ்விடமா நன்றி மறந்தவர்களாய் இருக்கிறார்கள்?)" என்று கேட்கப்பட்டது.
நபி (ஸல்), "அவர்கள் தமது கணவன்மார்களிடம் நன்றி மறந்தவர்களாய் இருக்கின்றனர். மேலும், அவர்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் மற்றும் நன்மைகளை அவர்கள் மறந்துவிடுகின்றனர். நீங்கள் அவர்களில் ஒருத்திக்கு ஒரு காலப் பகுதியில் (அல்லது காலம் முழுதும்) நன்மைகளை செய்துக் கொண்டேயிருந்து, பின்னர் அவள் உங்களிடம் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை கண்டால், நான் ஒருபோதும் உன்னிடம் எந்த நன்மையையும் கண்டதில்லை என்று சொல்வாள். " என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:128)

தமிழில் டைப் செய்ய: