Thursday, August 13, 2009

பகுதி:19 - விசுவாசிகளிலிருந்து இரு குழுக்கள் போரில் ஈடுபட்டால் அவர்களிருவரிடமும் சமரசத்தை ஏற்படுத்துங்கள்.

அல்லாஹ் கூறுகிறான், "விசுவாசிகளிலிருந்து இரு குழுக்கள் போரில் ஈடுபட்டால் அவர்களிருவரிடமும் சமரசத்தை ஏற்படுத்துங்கள்... (அல் குர்-ஆன்:49:9)

அபூ பக்ராஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்:
"முஸ்லிம்கள் ஒருவருடன் ஒருவர் வாளெடுத்து சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொலை செய்தவர் மற்றும் கொலை செய்யப்பட்டவர் ஆகிய இருவருமே நரகிற்குத் தான் செல்வர்." என்று அல்லாஹ்வின் தூதர் கூறக் கேட்டேன். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே, கொலை செய்தவர் (நரகிற்கு) செல்வது சரி. ஆனால், கொலை செய்யப் பட்டவரை பற்றி என்ன? (கொலை செய்யப் பட்டவர் ஏன் நரகிற்கு செல்ல வேண்டும்?)" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக அவர் தனது நண்பரை (முஸ்லீம் சகோதரரை) கொல்ல நாட்டம் கொண்டிருந்தார்." என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:130)

4 comments:

Unknown said...

அப்போ இந்துவை கொன்றால் சொர்க்மா?

Aboo Shakir said...

ஏன் இந்த கொலை வெறி?
முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டயிட்டுக்கொள்ளக் கூடாது என்பதே இங்கு கூறப்படுவது. அதற்காக, மற்றவர்களை கொல்லச் சொல்லவில்லை.
தயவு செய்து உங்கள் விதண்டா வாதத்தை இங்கு கொண்டு வராதீர்கள்.
மேலும், எந்த ஒரு மனித உயிரையும் காரணமின்றி கொல்பவனுக்கு நரகமே.
இணை வைத்தல், விபச்சாரம், மது அருந்துதல், கொலை செய்தல் ஆகியவை பெரும்பாவங்களே.
நட்புடன்,
அபூ ஷாகிர்

Unknown said...

அபூ
//தயவு செய்து உங்கள் விதண்டா //வாதத்தை இங்கு கொண்டு வராதீர்கள். //
இது சும்மா தமாஷ் . இனிமே இப்படி நடக்காது.

அப்புறம் தீர்ப்பு நாள் என்றைக்கு வரும் என்று எழுத முடியுமா

Unknown said...

அப்புறம் தீர்ப்பு நாள் என்றைக்கு வரும் என்று எழுத முடியுமா

தமிழில் டைப் செய்ய: