Friday, July 17, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 2

(விசுவாசிகளின் அன்னையர்) ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள், "அல்-ஹாரித் பின் ஹிஷாம் (ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் வினவினார், "அல்லாஹ்வின் தூதரே, தங்களுக்கு இறைசெய்தி (வஹீ) எவ்வாறு இறங்குகிறது?." அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிலளித்தார்கள், "சில நேரங்களின் அது மணியோசையை போல இருக்கும். இவ்வகையான வஹீ மற்றெல்லாவற்றையும் விட மிகக்கடினமானதாகும். இந்நிலை, நான் வஹீயை மனனம் செய்துக் கொண்டவுடன் விலகி விடும். சில நேரங்களில் ஒரு மனிதனின் தோற்றத்தில் வானவர் வருகிறார். அவர் சொல்வதை நான் மனனம் செய்துக் கொள்கிறேன். "
ஆயிஷா (ரலி) மேலும் அறிவிக்கிறார், "நிச்சயமாக, நான் நபியவர்களுக்கு வஹீ வரும்பொழுது பார்த்திருக்கிறேன். இறைசெய்தி முடிந்தவுடன் கடுங்குளிரிலும் நபியவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை வடிவதையும் கவனித்துள்ளேன்". (புஹாரி:1:2)

No comments:

தமிழில் டைப் செய்ய: