Saturday, July 18, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 3A

விசுவாசிகளின் அன்னையர் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதருக்கு (ஸல்) வஹீ நல்ல பகலொளியைப்போன்ற உண்மையான கனவாக ஆரமித்தது. அதன் பின்னர் தனித்திருப்பதன் மீதான விருப்பம் அவர் மீது அருளப்பட்டது. அவர் ஹிரா குகைக்குச்சென்று தொடர்ந்து பல இரவுகள், அவரது குடுமபத்தினரிடம் திரும்புமுன்னர், தனித்திருந்து அல்லாஹ்வை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். அங்கு தங்கியிருப்பதற்கான பிரயாண உணவை தம்முடன் கொண்டு செல்வார். பின்னர் மீண்டும் உணவை எடுத்துச்செல்வதற்காக (தனது மனைவி) கதீஜா (ரலி) யிடம் திரும்பிவருவார். இந்நிலை, ஒரு நாள் திடீரென சத்தியம் ஹிரா குகையில் அவர் மீது இறங்கும் வரை நீடித்தது. அவரிடம் வானவர் வந்து "ஓதும்" என வினவினார். நபி (ஸல்) பதிலுரைத்தார், "எப்படி ஒதுவதென்று நான் அறியேன்."
மேலும், நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள், "பின்னர் அந்த வானவர் என்னை பிடித்து என்னால் அதற்க்கு மேலும் தாங்கமுடியாத வண்ணம் அணைத்தார். பின்னர், அவர் என்னை விடுவித்து மீண்டும் ஓதும்படி கூறினார். நான் பதிலுரைத்தேன், "எப்படி ஒதுவதென்று நான் அறியேன்." அதன் பின்னர் இரண்டாவது முறையாக என்னால் தாங்கமுடியாத வண்ணம் அணைத்தார். பின்னர், அவர் என்னை விடுவித்து மீண்டும் ஓதும்படி கூறினார்.
ஆனால், மீண்டும் நான் பதிலுரைத்தேன், " "எப்படி ஒதுவதென்று நான் அறியேன் (அல்லது நான் என்ன ஓதுவது?)." அதன் பின்னர் மூன்றாவது முறையாக என்னை அணைத்து விடுவித்த பின் கூறினார், "படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதும். மனிதனை ஓர் இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக, உமது இறைவன் மிகவும் கண்ணியமிக்கவன். (அல்-குர்ஆன் 96:1-3)"
அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தன் இதயம் பட படக்க வகீயுடன் வீட்டுக்குத் திரும்பினார். பின்னர், கதீஜா பின்த் குவாலித் (ரலி) யிடம் சென்று, "எனனை போர்த்து, எனனை போர்த்து" என்றார். அவரிடமிருந்து பயம் விலகும் வரை அவரை போர்த்தியிருந்தனர். அதன் பின்னர் அங்கு நடந்தவற்றை கதீஜா (ரலி) யிடம் கூறிவிட்டு தனக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும் கூறினார்.
கதீஜவோ, "அவ்வாறில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லா உங்களை இழிவு படுத்தமாட்டான். நீங்கள் உங்கள் உற்றார் உறவினருடன் நல்லுறவு வைத்துள்ளீர்கள். ஏழைகள் மற்றும் வரியவர்களுக்கு உதவுகிறீர்கள். உங்கள் விருந்தினரை உபசரிக்கிறீர்கள். மேலும், சோதனைக்கு ஆட்பட்டோருக்கு உதவுகிறீர்கள்." என்று கூறி கதீஜா (ரலி) தன்னுடைய தந்தையின் உடன் பிறந்தவரின் மகனான வரகா பின் நவ்பல் பின் அசத் பின் அப்துல் உஜ்ஜா விடம் அழைத்துச் சென்றார். வரகா அறியாமை காலத்திலேயே கிருஸ்தவராக மாறி ஹீப்ரு மொழியில் எழுதுபவராகவுமிருந்தார். அவர் இன்ஜீல் வேதத்தை ஹீப்ரு மொழியில் அல்லாஹ் நாடிய அளவிற்கு எழுதுபவர். அவர் ஓர் வயது முதிர்ந்தவர்,பார்வையையும் இழந்திருந்தார்.
கதீஜா (ரலி) அவரிடம் கூறினார், "என்னுடைய ஒன்று விட்ட சகோதரரே, தங்களின் சகோதரன் மகன் கூறுவதை கேளும்."
வரகா கேட்டார், "என் சகோதரர் மகனே, நீர் என்ன பார்த்தீர்?"
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தான் கண்டவற்றை விவரித்தார்.
வரகா கூறினார், "இவர் தான் அல்லாஹ்வால் மூஸாவுக்கு அனுப்பப்பட்டவர். நான் என் இளமையில் இருந்து உமது மக்கள் உம்மை துரத்தும்போது உயிருடன் இருக்கமாட்டேனோ என்று எண்ணுகிறேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார், "அவர்கள் என்னை துரத்தி விடுவார்களா?."
அதற்கவர் ஆமென்று கூறி, "எவரேனுமொருவர் நீர் கொண்டு வந்துள்ளதை போன்று கொண்டு வந்தால் அவர் மக்களால் பகைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். நான் அந்த நாள் வரை உயிரோடிருந்தால் நான் உமக்கு பலமாக உதவுவேன்" என்றார்.
ஆனால், சில நாட்களுக்குப் பிறகு வரகா மரணமடைந்து விட்டார். இறைச்செய்தியும் தற்காலிகமாக சில நாட்களுக்கு நின்றுப் போனது. (புஹாரி: 1:3A)

4 comments:

கான் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல முயற்ச்சி......... தொடருங்கள் இந்த சிறந்த பணியை....

Gifariz said...
This comment has been removed by the author.
Gifariz said...

மாஷா அல்லாஹ்

நல்ல முயற்சி...

ஆனால், இதில் கூடுதலானவர்கள் மாற்று மதத்தவர்கள் இருப்பதால் அவர்களுக்கு புரியும் படியாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்..

அடுத்து

இதற்கான தலைப்புக்கள் இடும் போது பொதுவான தலைப்புக்கள் இட்டால் எல்லோரும் என்ன என்று பார்பார்கள்

நன்றி

Aboo Shakir said...

தங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி.

இறைவன் நாடினால் அனைத்து ஹதீஸ்களையும் பதியலாம் என்று நினைக்கிறேன். ஆனால், தமிழில் பதிய மிகுந்த பொறுமையும் நேரமும் தேவைப்படுகிறது. ஆரம்பித்தவுடன் தான் இடதி புரிந்துக்கொண்டேன். இருப்பினும் இந்த வரவேற்பு இறையருளால் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.
//ஆனால், இதில் கூடுதலானவர்கள் மாற்று மதத்தவர்கள் இருப்பதால் அவர்களுக்கு புரியும் படியாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்..//
இது ஹதீஸ் சம்பதப்பட்டதாக இருப்பதால் நாம் நம்முடைய சொந்தக் கருத்தை இணைக்க முடியாததற்கு வருந்துகிறேன். அனால், நான் பதிவுக்கு புதிது என்பதால் தங்களின் குறிப்பான அறிவுறுத்தல் இருந்தால் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். எழுத்து நடையில் மாற்றம் வேண்டும் என நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்.

//இதற்கான தலைப்புக்கள் இடும் போது பொதுவான தலைப்புக்கள் இட்டால் எல்லோரும் என்ன என்று பார்பார்கள்//

தினம் ஒரு நபிமொழி என தலைப்பை மாற்றவா?

தங்கள் அன்பான கருத்துக்காக காத்திருக்கிறேன்.
நன்றி
அபூ ஷாகிர்

தமிழில் டைப் செய்ய: